அரசியல் அஸ்தமனத்தை உருவாக்கத்துடிக்கும் சம்பந்தன் சுமந்திரன் சேனாதியுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் சர்வதேசமே மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்திருக்கும் வடமாகாண சபை தேர்தலினை ஒரு பிரதேசசபை தேர்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைகூட கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து செயல்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் உள்ளடங்கப்பட்ட கட்சிகளுக்கிடையிலான குத்துவெட்டுக்கள் தொடக்கம் வேட்பாளர்கள் தெரிவுவரை தான்தோண்றித்தனமான வகையில் இலங்கை தமிழரசுக்கட்சினரதும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணினரதும் செயற்பாடுகளை புரிவது பெருங்கடலில் விழும் மழைத்துளியை காண்பற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது.

மிக நீண்டகால அரசியல் அனுபவங்களும் மக்கள் பலமுமுள்ள எத்தனையோ அரசியல் தலைமைகள் உள்ள நிலையிலும் எந்த ஒரு தேர்தலானாலும் அத்தேர்தலின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் புறம் தள்ளி உறவினர்களுக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனங்கள் வழங்கியுள்ள கூட்டமைப்புக்குள் இருக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் சுரேஸ் குழுவினர் வட மாகாண தமிழ் மக்களுக்கு இதனைவிட பெரிதொரு துரோகம் செய்துவிட முடியாது.

தானே முதலமைச்சர் வேட்பாளராகவும் வடக்கின் முதலமைச்சராகவும் வந்தேதீருவேன் என கனவுகண்டுகொண்டிருந்த சேனாதிராசாவுக்கும் பெரும்பாலான தமிழரசுக்கட்சியினருக்கும் எப்போதுமே அரசுடன் அரவணைந்து தமது சுய தேவைகளை பூர்த்திசெய்யும் சம்பந்தன் சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போண்றோரால் ஆப்பு வைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமே.

ஜே ஆர் ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது திருகோணமலை விருந்தினர் விடுதிக்கு மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற சம்பந்தன் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி குண்டுதுளைக்காத வாகனத்தையும் ஜனாதிபதி விசேட பாதுகாப்புப்பிரிவினரின் பாதுகாப்பும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கும் விசேட உலங்கு வானூர்தி வசதிகளையும் பெற்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் .

அதேபோண்று தனது உன்னத தலைவனையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் ஒரே தினத்தில் பலிகொடுத்து தன்னைத் தானே தலைவனாக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட மிகமுக்கியமான ஒருவர், அதன் காரணத்தினால் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸவின் அமைச்சின் ஆலோசகர் பதவியினைப்பெற்ற்றதோடு சமிற் மாடிக்கட்டிடத்தில் அரசாங்க வீடுஒண்றினையும் பெற்று சுகபோக வாழ்வு நடாத்தியவர்

பின்னர் புலியின் வாலைப்பிடித்தாலே பாராளுமண்ற ஆசனத்தைக் கைப்பற்றமுடியும் என்பதை தெளிவாக புரிந்திருந்த சுரேஸ் புலிகளுக்காக வக்காளத்துவாங்குவதில் தன்னை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு படம் காட்டியவர்.

இலங்கைத் தமிழர்களை ஆயுததாரிகள் மற்றும் கபடதாரிகளினால்தான் அழுங்கு பிடியி்லி்ருந்து விடுவிப்பதற்கு முகம்தெரியாத சங்திகள் பலவற்றின் திணி்ப்பே திரு.விக்னேஸ்வரன் என்றால் அது மிகையாகாது.

இது ஒருபுறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுடன் மிக நெ ருங்கிய நட்பினைக்கொண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி பத்மநாபா அமைப்பினரையும் உள்வாங்கிச்செல்லவேண்டுமென பலர் விரும்பியிருந்த வேளையில் தம்க்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒனறை அவர்களுக்கு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வந்தபோதும் பிரபல மதுபான வியாபாரியும் தனது சொந்த சகோதரனை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் கடுமையான எதிர்ப்பினால் அந்த ஒற்றுமையும் கைகூடாமல் விடப்பட்டிருக்கின்றது.

அதே நேரம் புளட் அமைப்பின் தலைவர் திரு.சித்தார்த்தனை தொடர்புகொண்டு பல்கலைக்கழக மாணவ பிரதிநிதி தர்ஸனனை தமிழரசுக் கட்சியினர் ஓரம் கட்டியுள்ளது ஒரு சிறந்த நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியுமா என வினவியபோது தர்ஸனன் விரும்பினால் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இரண்டில் ஒன்றை தாம் வழங்க தயார் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் இதே பல்கலைக்கழக சமூகம் புளொட் அமைப்பை துரோகிகளாகவே பார்க்கின்றது என்பது வேறு அத்தியாயம்.

எது எவ்வாறாயினும் தேர்தல் அரசியலிலும் விட்டுக்கொடுப்பு தேவைஎன்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் புளட் அமைப்பினரும் எண்ணுவது வரவேற்கப்படவேண்டியதே.

தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டியும் தமது இருப்புகளுக்காக மட்டுமே இளைஞர்களையும் மாணவர்களையும் பாவிக்கும் தமிழரசுக் கட்சினருக்கெதிராக தமிழ்கரசுக் கட்சியின் இளஞர் அமைப்பும் யாழ் பல்கலைக்கழக மாணவ சக்தியும் கடுமையான எதிர்ப்பினை காட்டிவரும் இந்த நிலையிலாவது குடித்தால் பளைய கள்ளு நிறுத்தினால் மீசை நரைத்தவன் என்ற கொள்கையை தாமதமின்றி மாற்றி வயது வந்தவர்களை இல்லத்தில் இருத்திவிட்டு வாலிபர்களுக்கு வழிவிடுவதே சிறந்த செயலாக அமையும்.

மாறாக வேட்டி கட்டி விபூதியணிந்து உருத்திராக்கமாலை போட்டவர்கள்தான் வேட்பாளர்கள் என்று தமிழரசுக் கட்சி எண்ணும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமே தமிழரசுக் கட்சினருக்கு வடமாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் அரசியல் அஸ்த்தமனம் என்பதனை மக்கள் நிருபிப்பார்கள்

எஸ்.எஸ்.கணேந்திரன்

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News