தயாசிரியின் குண்டர்கள் எங்கள் அலுவலகங்களை உடைத்தெரிகிறார்கள்!
குருணாகலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் தயாசிரி ஜயசேக்கரவின் குண்டர்களினால் தனது தேர்தல் அலுவலகம் உடைக்கப்பட்டதாக பண்டுவஸ்நுவரவின் புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வழக்கறிஞர் சித்த் பண்டார குறிப்பிடுகிறார்.
குருணாகலை நகரத்தின் புதிய ஐக்கிய தேசியக் கட்சிக் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பண்டார குறிப்பிடுகையில், கராஜ் இலக்கத்துடனும் இலக்கத் தகடு இன்றியும் நான்கு வாகனங்களில் வந்த குண்டர்கள் அலுவலகத்தை உடைத்து பதாகைகள் அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு, கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
‘பண்டுவஸ்நுவர தேர்தல் பிரிவின் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளரான எனது தேர்தல் அலுவலகத்தை உடைத்தவர்கள் தயாசிரி ஜயசேக்கரவின் குண்டர்கள். அவர்கள் எங்கள் கட்சியினருக்கு கொலை அச்சுறுத்தல் விட்டுச்சென்றுள்ளார்கள்.
சாதாரணமான முறையில் ஜயசேக்கரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்திருப்பதால் குண்டர்களை அனுப்பி தாக்குவதும் அச்சமூட்டுவதும் எதற்காகவோ என நான் வினா தொடுக்கிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக சென்ற 18 ஆம் திகதி ஹெட்டிபொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses