பஸ் கட்டணத்தை அதிகரித்தே தீருவோம்...! இடமளிக்காதுவிடின் வழக்காடுவோம்!!
கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடம் கொடுக்காதுவிட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகிறார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிடுகையில்,
செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நூற்றுக்கு பத்து வீதத்தால் அதிகரிப்பதற்கு எண்ணியிருப்பதாகவும், அதில் எந்தவித மாற்றங்களும் நிகழாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சங்கத்தின் மூலம் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சட்ட விரோதமாக இருந்தால் வழக்குத் தொடருமாறு போக்குவரத்துச் ஆணைக்குழுவின் தலைவருக்கு சவால் விடுவதாகக் குறிப்பிட்ட விஜேரத்ன, கட்டண அதிகரிப்புப் பற்றி அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டக்கோவையில் பஸ் கட்டணம் தொடர்பான அதிகாரம் அதற்கு இல்லையென்றும், பஸ் கட்டணம் தொடர்பில் தேசிய கொள்கை வீழ்ந்துள்ளதால் பஸ் சங்கத்திற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் சுமுகமான ஒப்பந்தம் இல்லாமல் போயுள்ளதாகவும் இதனால் பஸ் கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சட்டரீதியான அதிகாரம் பஸ் சங்கங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பஸ் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கைக்கேற்ப, ஜூலை மாதம் முதலாம் திகதி அதிகரித்த பஸ் கட்டணத்தை பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட இருந்தபோதும், அதனை போக்குவரத்து ஆணைக்குழு நிறைவேற்றாமல் இருந்ததால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டணம் தொடர்பிலான கொள்கையை மீறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses