6 ஆண்டுகளின் பின்னர் வெளியே வருகிறது கதிர்காமர் சிலை!
ஆறு ஆண்டுகளாக பெட்டியில் அடைக்கப்பட்டு கொழும்பு ஹோர்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையக் காணியில் வைக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் கதிர்காமரின் சிலையை அந்நிலையத்தில் வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேசப் புகழ்பெற்ற முன்னாள் சர்வதேசப்புகழ் வெளிநாட்டமைச்சர்லக்ஷ்மன் கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டளவில் இந்தச் சிலை ரஷ்யாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விசேட உலோகத்தினால் வடிவமைக்கப்பட்டு, ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சிலையின் எடை 15 மெட்ரிக் தொன் எனக் கூறப்படுகிறது.
அந்தச் சிலையை கொழும்பு 07, ஹோர்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் வைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதும், அமைச்சர் ஒருவரின் எதிர்ப்பினால் அதனை நிருவ முடியாமல் போயுள்ளது.
அதனால் அந்தச் சிலை மரப்பெட்டியில் உள்ளிடப்பட்டு, அந்நிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மரப்பெட்டி சேதமடைந்து உருக்குலைந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses