முற்று முழுதாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவின் ஒன்பது வைத்தியர்கள் அடங்கிய வைத்திய குழு 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் புத்தள த்தைச் சேர்ந்த 27 வயதான குழந்தையொன்றின் தந்தையின் விந்தகத்துடன் துண்டாடப்பட்ட ஆணுறுப்பையே இவ்வாறு இணைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இவ்வாறான சத்திரசிகிச்சையொன்று உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பதே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களின் கருத்தாகும். அரிவாள் ஒன்றின் மூலமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த வைத்தியர்கள் இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நோயாளி புத்தளம் வைத்தியசாலையிலிருந்தே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் வேறாகவும் ஆணுறுப்பு விந்தகத்துடன் வேறாகவும் இருந்தது. அதிகாலை நான்கு மணியளவில் விந்தகம் உடலிலிருந்து வேறாக்கப்பட்டதாகவும் வெட்டுக்காயம் ஏற்பட்ட தெரிவிக்கப்படும் அதேவேளை நான்கு மணிநேரத்திற்கு பின்னரே நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிப்பதற்கு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்ட காலம் மற்றும் துண்டிக்கப்பட்ட விந்தகம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட முறைமை முக்கியமானதாக அமைந்தது. இது உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சையாகவே நாம் கருதுகின்றோம். ஒரே அறுவையில் ஆணுறுப்பு விந்தகத்துடன் அறுக்கப்பட்டு ள்ளது. சத்திர சிகிச்சையின் போது முதன்முதலில் மூத்திர குழாய் இணைக்கப் பட்டதுடன், அதற்கு பின்னர் ஏனைய நரப்பு தொகுதிகள் இணைக்கபட்டன.
விந்தகம் துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் அவரே அறுத்துகொண்டாதாக வாக்குமூலமளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
முற்று முழுதாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பை இணைத்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses