யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக புதியவர் பதவியேற்பு
யாழ்.மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக புத்தளத்தில் இருந்து இடமாற்றம் பெற்று வருகை தந்த கிலகிரி கணேகம சம்பரதாய பூர்வமாக இன்று காலை 8.45 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இதேவேளை, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ண புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses