புலமைப் பரிசில் பரீட்சை மிலேச்சத்தனம்மிக்க பரீட்சையாக மாறியுள்ளது....!
மாணவர்கள் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் உதவித்தொகை வழங்குவதற்காக ஆரம் பிக்கப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையானது, புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு மாணவர்களை அநுமதிப்பதற்கான பரீட்சையாக மாறியுள்ளதனால் அது, 'மிலேச்சத்தனமான பரீட்சையாக மாறியுள்ளது என பாடசாலைகளைக் காக்கும் மக்கள் அமைப்பு குறிப்பிடுகின்றது.
இந்த மிலேச்சத்தனத்தினால் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற பிள்ளை களை கருணையின்றி இல்லங்களிலிருந்து விரட்டியடிக்கும் நிலைமைக்குப் பெற்றோர்கள் மாறியிருப்பதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தம்மிக்க அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உடனடியாக இந்நிலையை நீக்குவதற்கு கல்வியமைச்சு உட்பட பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அதற்கு முன்னர் கல்வியியலாளர்களின் கருத்துக்களைப் பெற்று பரீட்சை நடாத்துவது குறித்து பொருத்தமானதொரு அமைப்புமுறையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரபல்ய பெயர்களை மாற்றியமைத்து, அனைத்துச் சிறார்களும் சுதந்திரமாக அனைத்துக் கல்விச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் பாடசாலைகளை ஏற்படுத்தி, திறமை வாய்ந்த மாணவர்களை அப்பாடசாலைகளுள் உள்வாங்குவதற்கான ஒருமுறையை நாட்டினுள்ளே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses