கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றமும் சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் ஏற்பாடு செய்த சிறுவர் தின வைபவங்கள் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.சாலிஹ் ,சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரி திருமதி ஓ.கே.சரிபா ஆகியோரின் தலைமைகளில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அத்தோடு ஸ்ரீ சுபத்திரா ராமய முன்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தலைமையில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபைக்கு ஊர்வலமாக வந்த சிறார்களை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வரவேற்று அம்மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைத்தார்.
மேற் குறித்த இரு வைபவங்களிலும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறுவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சமுர்த்தி உதவி பெறும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் பாதணிகள் வழங்கப்பட்டதுடன் வறிய மயணவர்களுக்கான சிசு திரிய புலமைப் பரிசு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வும் அங்கு இடம் பெற்றது.
நிகழ்வுகளில் சமுர்த்தி திணைக்களத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கல்முனை லயன்ஸ் கழகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களும் சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
(யு.எம்.இஸ்ஹாக்)
0 comments
Write Down Your Responses