எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்கால சிங்கள இலக்கியங்கள்' வெளியீடு (படங்கள் இணைப்பு)
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றப் பணிப்பாளரும், மின்னியல் ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான எம்.சீ. ரஸ்மினின் 'போர்க்காள சிங்கள இலக்கியங்கள்' ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983 - 2007) எனும் ஆய்வு நூல் வெளியீடும் ஆய்வரங்கும் சென்ற 29 ஆம் திகதி கொழும்பு லெங்கைத் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் 'Sinhala Literature in the Era of Ethnic War Towards Post - War பிரபல திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனும், சிங்களத்தில் ருகுணு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு விரிவுரையாளர் தம்மிக்க ஜயசிங்கவும் நூல் அறிமுகம் மற்றும் நூலாசிரியர் அறிமுகமும் செய்தனர். தம்மிக்க ஜயசிங்க தான் சிங்களத்தில் உரையாற்றிவிட்டு கடைசியில் செந்தமிழில் இலக்கணம் பிசகாமல் ஆற்றிய சிறுபேச்சு எல்லோர் உள்ளங்களையும் நன்கு கவர்ந்தது எனலாம். (அவரது பேச்சு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
பேராதனைப் பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் குழுநிலைக் கலந்துரையாடலை மேற்கொண்டு நூல் பற்றிய ஆய்வு ரீதியாக விளக்கினர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் எழுத்தாளர் சிட்னி மார்கஸ் டயஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
நூலின் முதற் பிரதியை எம்.சீ. ரஸ்மினை முளைகொள்ளச் செய்தவர் எனப் போற்றப்பட்ட சிட்னி மார்கஸ் டயஸ் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வை பிரபல ஒலி - ஒளிபரப்பாளர் நாகபூசணி கருப்பையா மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்போர் தொகுத்து வழங்கினர்.
(கலைமகன் பைரூஸ்)
/div>
0 comments
Write Down Your Responses