அமெரிக்காவும் பிரான்சும் அவர்கள் நினைத்தவாறு செயற்படமுடியாது! பன்கீ மூன் சீற்றம்
அமெரிக்காவும் பிரான்சும் அவர்கள் நினைத்தவாறு செயற் படமுடியாது. சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக இருந் தால் பாதுகாப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பன்கீ மூன் தெரிவித்து ள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்தினால் பாதுகாப்பு சபையின் ஏனைய அங் கத்துவ நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என ஐ.நா. செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் இட்ம்பெற்று வரும் சிரிய மோத ல்களை நிறுத்துவதற்கு ஐ.நா. பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியடைந்தன. மோதல்கள் காரணமாக ஒரு இலட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses