நாங்கள் வெற்றியீட்டி வடக்கிலுள்ள இராணுவத்தை துரத்தி 83 க்கு முன்னரான நிலைக்குக் கொணர்வோம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.ஏ. விக்னேஷ்வரன், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கிலுள்ள இராணுவத்தை முழுமையாக விரட்டி, 1983 க்கு முன்னரான நிலைக்குக் கொணர்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டத
தேசிய ரீதியிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி? இராணுவ ஆட்சியிலிருந்து வடக்கை மீட்டெடுப்பது எவ்வாறு? தமிழ் மக்களின் அவசரத் தேவைகள் என்ன? கரிசனை காட்ட வேண்டிய ஏனைய விடயங்கள் எவை? யுத்தத்தால் கதியற்றிருப்பவர்களின் பிரச்சினை, முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களைக் கொண்டு இந்த விஞ்ஞாபன வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses