காணாமல் போன படகு கரையொதுங்கியது!
வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாயல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்று காணாமல் போன இயந்திரப்படகு நேற்றுமுன்தினம் இரவு(11) கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளதாக படகு உரிமையாளரான வாழைச் சேனையைச் சேர்ந்த ஏ. எல். முபாறக் தெரிவித்தார்.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் பிறகு படகில் இருந்த கூரைப்பாயின் உதவியுடன் காற்று வீசிய திசையை நோக்கி கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளார்கள் என்றும் படகில் சென்ற மூன்று பெரும் தேகாரோக்கியமாக இருப்பதாகவும் படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses