விதிகளை மீறிய சம்பந்தனின் உரையால் பாராளுமன்றில் குழப்பம்!
பாராளுன்ற விதிகளை மீறிய வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று(08.08.2013) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த முற்பட்ட போது சபையில் குழப்பம் ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் சபை ஒத்திவைப்பு வேளையில் காணி சுவீகரிப்பு தொடர்பான பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு முற்பட்டபோதே இந்த குழப்பம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை இடம் பெறுகின்ற சில விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறியே ஆளும் கட்சி உறுப்பினர்களால் சபையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.
13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைவாக வடக்கில் காணி அதிகாரம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு முனைந்தார். இதன்போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த பிரதிச் சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய விடயங்களைத் தவிர்த்து நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து வெளியிட முடியும் எனப் பிரதிச்சபாநாயகர் அறிவித்தார்.
0 comments
Write Down Your Responses