மீள் அறிவித்தல் வரை பால்மா விளம்பரங்களுக்குத் தடை!
இறக்குமதி செய்யப்படும் பால்மாப் பொருட்களில் 'பொட்லினம்' எனும் விசத்தன்மை வாய்ந்த பக்ரீரியா உள்ளடங்கியுள்ளதாக சர்வதேச இரசாயன பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, இந்நாட்டுச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து சிறுவர் பால்மாப் பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விரைவில் இடைநிறுத்தி வைப்பதற்கு சுகாதாரத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதற்கேற்ப, சந்தையில் தற்போது இருக்கின்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பால்மாப் பொருட்களையும் பரிசீலனை செய்வதற்கு அமைச்சு ஆவன செய்துவருவதோடு, இந்நாட்டுச் சிறார்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவினை எடுத்ததாகவும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.
அத்தோடு சந்தையில் வைக்கப்பட்டுள்ள பால்மாவுடன் தொடர்புடைய விளம்பரங்களை மீண்டும் அறிவிக்கும் வரை வெளியிட வேண்டாம் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளைக் கேட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses