பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது!
நீண்டகாலமாக கஞ்சா போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் அநுராதபுரத்தின் கடப்பனஹ பிரதேசத்தில் வைத்து கைக் குண்டு ஒன்றுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments
Write Down Your Responses