பக்தர்கள் உயிரை காவுகொண்ட ரயில்! 37 பேர் பலி!

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழ ந்தவர்களில் 13 பேர் பெண்கள் உட்பட 4 குழந்தைகளும் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத் தில் நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் சமஸ்திப்பூர் என்ற இடத்திலிரு ந்து சஹார்ஸா நோக்கி கான்வரியாக்கள் எனப்படும் சிவ பக்தர்கள், பயணிகள் ரயி லில் திங்கட்கிழமை சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ககரியா மாவ ட்டத்தில் உள்ள தமாரா காட் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் தண்டவாளத்தில் நடந்துகொண்டிருந்தனர்.

திங்கட்கிழமையையொட்டி அப்பகுதி யில் உள்ள காத்யாயனி ஸ்தானில் உள்ள சிவன் கோயிலில் சுவாமிக்கு ஜலாபிஷேகம் செய்வதற்காக செல்லத் திட்டமிட்டிருந்தனர். அப்போது அவர்கள் நடந்துகொண்டிருந்த தண்டவாள தடத்தில் மணிக்கு 80 கி மீ. வேகத்தில் வந்த சஹார்ஸா-பாட்னா ராஜ்யராணி அதிவேக ரயில் அவர்கள் மீது மோதியது.ரயில் மிக வேகமாக வந்ததால் அவசர கால பிரேக்குகளை இயக்கியும் கூட, ரயில் சற்று தூரம் சென்ற பின்னரே நின்றது.

காலை சுமார் 8.40 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 37 பக்தர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 13 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள், 20 ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் ககரியா சஹார்ஸா, முங்கேர், நௌகாச்சியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்விபத்தில் காயமடைந்த 24 பேரும் ககரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பிற பயணிகளும் அப்பகுதியிலிருந்த மக்களும் எக்ஸ்பிரஸ் ரயில் சாரதி மீதும் தாக்குதல் நடத்தினர். பின்னர், சமஸ்திப்பூர் சஹார்ஸா ரயிலின் என்ஜினையும் சஹார்ஸா - பாட்னா ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியையும் உள்ளூர் மக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதனிடையே அதிவேக ரயிலின் இரண்டு லோகோ பைலட்டுகள் எனப்படும் துணை டிரைவர்களான ராஜாராம் பாஸ்வான் மற்றும் சுலைகுமார் சுமன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் நலமாக இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் :- பக்தர்கள் அத்துமீறி தண்டவாளத்தைக் கடக்க முயன்றதால் ஏற்பட்ட விபத்து இது என்று தெரிவித்தார். இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், 'ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயில் தமாரா காட் நிலையத்தில் நிற்பது கிடையாது. அவர்கள் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ரயில் சாரதி அவசர கால பிரேக்குகளை இயக்கினார். ஆனால் ரயில் வந்த வேகத்தில் பக்தர்கள் மீது மோதியது. அதன் பிறகே நின்றது. இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

ரூ. 2 இலட்சம் இழப்பீடு நிதீஷ்குமார் அறிவிப்பு: ரயில் விபத்தில் 37 பக்தர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் நிதீஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் இழப்பீட்டையும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் அவர் உடனடியாக ஹாஜிபூரில் உள்ள கிழக்கு மத்திய ரயில்வே மேலாளரைத் தொடர்புகொண்டு பேசினார்.

விபத்து குறித்து தகவல்களைத் திரட்டுமாறும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ரயில்வே நிர்வாகத்துக்கு உதவுமாறு சஹார்ஸா மற்றும் ககரியா மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News