மனித உரிமைகள் அபிவிருத்தியும் பாதுகாப்பும் VIENNA பிரகடணங்களுக்கு அமைவாக இடம்பெற வேண்டும். ஐநாவில் இலங்கை.
உலகெங்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதும், அவை மேம்படுத்தப்படுவதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் "வியன்னா" பிரகடனங்களுக்கமைவாகவே, இடம்பெற வேண்டுமென, இலங்கை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனீவா நகரில் தற்போது நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் வியன்னா பிரகடனம் மற்றும் செயற்பாட்டு ரீதியான திட்டங்கள் தொடர்பாக, உயர்குழு கூட்டத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து, இலங்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொடர்புகளை பாதுகாத்து, ஐ.நா. அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பேணி, செயற்பட வேண்டுமெனவும், இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கப்பாடுகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இலங்கை தெரிவித்துள்ளது.
0 comments
Write Down Your Responses