காலி ஹிரும்புரை பள்ளிவாசல் சேதம்.... சூத்திரதாரி யார்?
இன்று (22) அதிகாலை இரண்டு மணியளவில் காலி, ஹிரும்புரை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது விசமிகள் சிலர் தாறுமாறாக பள்ளிவாசல நிறையக் கற்களை எறிந்து யன்னல் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர். பள்ளிவாசலினுள்ளே நிறையக் கற்கள் காணப்படுகின்றன.
இச்சம்பவம்பற்றி பொலிஸாரிடம்அறியக் கொடுத்தும் குறித்த நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளததால் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் விடயம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் காலிப் பிரதேச பிரதம பொலிஸ் மாஅதிபர் நீல் தலுவத்தையுடன் தொடர்பு கொண்டு, உடனடியாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறும், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், குறித்த விடயம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses