தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கத்திக் குத்து- ஒருவர் பலி இன்னொருவர் படுகாயம்
மாத்தறையில் தூங்கிக்கொண்டிருந்த யாசகர் கத்தியால் குத்திக்கொலைச் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாத்தறை, மெதகொட பொதுச்சந்தையிலேயே இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தூங்கிக் கொண்டிருந்த மேலும் ஒரு யாசகர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses