இலங்கைக்கு ஆப்படிக்க ஜெனீவா செல்கிறது கூட்டமைப்பு.!
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆப்பு இறுக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினர் ஜெனீவாவிற்கு செல்லவுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா செல்லவிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
0 comments
Write Down Your Responses