ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சடலமாக மீட்பு
பாணந்துறை சாகரமாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரது சடலங்கள் 119 என்ற அவசரதொலைபேசி எண்ணுக்கு கிடைத்த தகவலையடுத்து மீட்டுள்ளதாக பாணந்துறைப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு பொலிசார் குறித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது தந்தையார் தூக்கிட்டநிலையிலும், தாய் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிசார் தெரிவத்ததுடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாணந்துறைப்பொலிசார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses