ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் சற்று முன்னர் ஆரம்பம், இலங்கைக்கு ஆப்பு 20 ஆம் திகதி.!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.ஐக்கியநாடுகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையில் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இக் கூட்டத் தொடர் இடம்பெறும்.
அத்துடன் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 20 ஆம் திகதி மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இலங்கையின் சார்பில் ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளனர்.
0 comments
Write Down Your Responses