தழிழர்களின் காணிகளை அபகரிக்கும் அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக முல்லைத்தீவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்- படங்கள் இணைப்பு
வன்னியில் அமைச்சர் ரிசாத் பதியூதினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணப் பெண்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ் ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில் வடமாகாணப் பெண்கள் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த ரூபன் விமலேஸ்வரி மற்றும் செயலாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட அமைப்பினைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை முல்லைத்தீவில் தமிழ் மக்கள் இன்னமும் மீளக்குடியேற்றப்படாத நிலையில் அமைச்சர் ரிசாத் 15 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இந்நிலை தொடருமானால் தமிழர்களின் பூர்;வீக நிலங்கள் யாவும் 10 வருடங்களில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.
0 comments
Write Down Your Responses