பௌத்த துறவியாகின்றான் முஸ்லிம் சிறுவன்
மொஹமட் ஸப்ராஸ் என்ற இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறுவன் தலங்கம நாபீத்த எனும் பெயரில் பௌத்த மதத்தை ஏற்றுத் துறவியாகியுள்ளான். கொஸ்வத்த துடுகெமுனு மாவத்தையில் வசித்து வருகின்ற ஸப்ராஸ், அனீஸா -ஸெய்னுல் தம்பதியினரின் மூன்றாவது புதல்வராவான். பெற்றோரின் பூரண ஆதரவுடனேயேசிறுவன் பெளத்த துறவியாக மாறியிருக்கின்றான்.
கொஸ்வத்த எட்டாம் கட்டையிலுள்ள லும்பினி விவேக்க சேனாசன அமரபுர தமலி ஸ்ரீசுமன விகாரதிபதி தலவத்துகொட ஸ்ரீ சத்தா மங்கல தேரரின் தலைமையில் குறித்த விகாரையின் 24 ஆவது இளம் பௌத்த துறவியாக ஒன்றிணைந்துள்ளான் ஸப்ராஸ் என லங்கா சீ நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses