இலங்கை கடற்படையில் பெண்புலி
கடற்படையின் வாத்தியக் குழுவில் புதிதாக இணைந்துகொண்டுள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். ஷந்தனி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
இந்த முன்னாள் புலி உறுப்பினர் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா ‘சிரிலிய சவிய’ இல்லத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டுவந்ததுடன் இவர் தன்னுடைய புணர்வாழ்வு காலத்தில் சர்வதேச கல்லூரியொன்றில் உயர் கல்வியை பெற்றுக்கொண்டதன் பின்னர் கடற்படையின் வாத்தியக் குழுவில் ஷந்தனி இணைந்துள்ளார்.
ஜநாதிபதியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ கடற்படையின் உப லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments
Write Down Your Responses