பிள்ளை தலைவலியென்று அடிக்கடி அழுகின்றதா?

உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா?பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.

'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம்.

தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன?

Nemoursஅறக்கட்டளையானது குழந்தைகளுக்கு தலைவலி தூண்டப்படுவதற்கு பின் வரும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுகிறது.
போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஒரு காரணமாகும். நேரங்கடந்து தூங்கச் செல்வது அல்லது இடையில் முழித்து எழ நேரல், வழமையான நேரத்திற்கு முன்னரே எழ நேருதல்.

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பசியோடு இருத்தல், போதிய நீராகாரம் இன்றி உடல் நா உலர்தல் போன்றவையும் தலைவலியைத் தூண்டலாம்.

ஏதாவது மன அழுத்தங்களும் காரணமாகலாம்.நீண்ட நேரமாக கணனியாடு இருத்தல் அல்லது தொலைக்காட்சி பார்ப்பதும் வேறு காரணங்களாகும்.

தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல் ஆகியவையும் தலைவலியைக் கொண்டு வரலாம்.தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.

கடுமையான மணங்களை நுகர நேர்ந்தாலும் ஏற்படலாம். வாசனைத் திரவியங்கள் (Perfumes), பெயின்ட் மணம், சாம்பராணி மணம் போன்றவை சில உதாரணங்களாகும்.

குழந்தைகள் வளருகின்றன. இதன்போது அவர்கள் உடலில் பலவிதமான ஹோர்மோன் மாற்றங்கள் நேர்கின்றன. இவையும் தலைவலியைத் தோற்றலாம்.

காரில் நீண்ட நேரம் செல்ல நேரும்போதும் சில குழந்தைகளுக்கு தலைவலி ஏற்படுகிறது.புகைத்தல். வீட்டில் தகப்பன், உறவினர்கள் புகைக்கக் கூடும். அல்லது பொது இடங்களில் யாராவது புகைக்கக் கூடும். இது தன்செயலின்றிப் புகைத்தலாகும்.

இதுவும் இன்னொரு காரணமாகும்.
கோப்பி, கொக்கோ போன்ற கபேன் கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை அவர்களில் ஏற்படுத்தவதாகச் சொல்லப்படுகிறது.
சில மருந்துகள் எடுப்பதும்.

மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலையிடி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனத்தைக் குளப்பிக் கொள்ள வேண்டாம்.

மருத்துவரை நாட வேண்டியது எப்போது?

இருந்தபோதும் எத்தகைய நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் எனத் தெரிந்திருப்பது நல்லது.
தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால்.
தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.
1. வாந்தியெடுத்தல்
2. பார்வையில் மாற்றம், இரண்டாகத் தெரிதல்
3. கழுத்து உழைவு, கழுத்து விறைப்பு
4. குழப்பமான மனநிலை
5. சமநிலை பாதிப்பு
6. கடுமையான காய்ச்சல்
தலையிடியானது குழந்தையின் தூக்கத்தைக் குழப்பமாக இருந்தால் அல்லது காலையில் கண்விழித்து எழும்போதே தலைவலி இருந்தால்.
3 வயதாகும் முன்னரே அத்தகைய தலைவலி ஏற்பட்டால்

பொதுவான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதிலேயே பெரும்பாலும் தவலவலித் தொல்லை குழந்தைக்கு நீங்கிவிடும்.

வைத்தியரை நாடி ஓடும் முன்னர் இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News