வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு மே நடுப்பகுதியில் தேர்தல் ?
மத்திய மற்றும் வடமேல் ஆகிய இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் நடத்தப்படவிருப்பதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.குற்றப்பிரேரணை மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை பரிசோதிக்கும் வகையிலேயே இந்த இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக அரசாங்க உயர் மட்டங்களிலிருந்து அறிய முடிகின்றது.
0 comments
Write Down Your Responses