இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு கிளர்ச்சி சிரியாவில் கடந்த 2 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்குமான யுத்தம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ஜாம்ராயா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த ராணுவ ஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது . இதில் இருவர் பலியாகினர்.
இதுநாள் வரை லெபனான் மீது தாக்குதல் நடத்திக் கொண்டு ஈரானை மிரட்டிக் கொண்டு இருந்த இஸ்ரேல் தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்தியிறுக்கிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக தமது நாடும் தாக்குதல் நடத்தும் என்று ஈரானும் அறிவித்திருக்கிறது.
0 comments
Write Down Your Responses