உயர்தர மாணவர்கள் செய்த அநியாயம் தெரியுமோ?
தனது கணவனுடன் பயணம் செய்துகொண்டிருந்த குடும்பப் பெண்ணொருத்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதற்காக பருவமடையாத இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதிவரை சிறையிலிடுமாறு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹேசாந்தத மெல் பொலிசாருக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.
தனது கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது, வண்டியைப் புரட்டி, 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதற்காக புத்தளம் நகரத்திலுள்ள புகழ்பெற்ற முஸ்லிம் பாடசலையொன்றில் உயர்கல்வி கற்கின்ற மாணவர்ளை எட்டுப்பேரை பொலிசார் விசாணைக்குட்படுத்தினர்.
இந்த எட்டுப்பேரில் நெருங்கிய சந்தேகத்திற்குரிய இளம்வயதுடைய மூவரும் தறபோது புத்தளம் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்மணி ஒரு இந்துக் குடும்பப் பெண்ணாவாள்.
0 comments
Write Down Your Responses