ஐ.நா. சபையில் நடைபெறும் போர்க்குற்ற விசாரணையில் பா.ம.க. வும் பங்கேற்குமாம்!
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் போர் குற்ற விசாரணையில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நாளை நடைபெறும் போர்க்குற்ற விசாரணையில் பசுமை தாயகம் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்பார் என்றும் இலங்கை மீது ஏன் போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை அவர் முன்வைப்பார் என்றும் அதேபோல், வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ஜி.கே.மணியுடன் பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருள் கலந்து கொள்வார் என்றும் தொடர்ந்து, இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடைபெறவிருக்கும் சர்வதேச தமிழ் மாநாட்டிலும் அவர்கள் இருவரும் பங்கேற்பார்கள் என்றும் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகின்ற நிகழ்வில் இலங்கை விடயம் பற்றி பேசுவதற்கான எந்த நிகழ்சி நிரலும் இல்லை என ஐ.நா அதிகாரிகள் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரின் அறிக்கை கேலிக்குரியது என்றும் இது ஒரு வெறும் அறிக்கை மட்டுமே எனவும் மக்கள் கிண்டல் செய்கின்றனர்.
0 comments
Write Down Your Responses