தங்கத்திற்காக தனிமையில் வசித்த வயோதிப மாது கொலை -கிளிநொச்சியில் பரிதாபம்
கொள்ளையர்களால் வாள் வெட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். இச்சம்பவத்தில் கிளிநொச்சி துர்க்காபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி வயது 73 என்ற வயோதபப் பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவராவார்.
உறவினர்கள் யாருமற்ற இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர் மீது கடந் 24ம் திகதி இனந்தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் இவர் அணிந்திருந்த இரண்டு பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் ஒரு சோடிக் காப்பு என்பவற்றை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மர்ற்ற்பட்டிருந்த இவர் சிகிச்சை பலன்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses