கனடாவில் பாரிய நிலநடுக்கம் ஹவாய் தீவுகள் சுனாமி அலைகளால் தாக்கப்படுகின்றன.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீற்றர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹாவாய் தீவை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹவாயிலுள்ள சைன் தீவை சுனாமி அலைகள் இன்று தாக்கியுள்ளன.
இந்நில நடுக்கமானது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது.
பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளை தாக்கி வருகின்றன.
தற்போது ஹவாய் தீவுகளை சுமார் 3 அடி உயர அளவிலான சுனாமி அலைகள் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
துற்போது தக்கி வரும் இவ்வலைகள் 6 அடி உயரம் வரை எழுந்து தாக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses