அப்துல் கலாமை போல் விஞ்ஞானியாக வர ஆசைப்படும் 10 வயது ஏழைச் சிறுவன்
குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 – 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான்.
பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.
பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.
காய்கறிகள் விற்பனை செய்து வந்த அவனது தந்தையின் கால் விபத்தில் முறிந்துவிட்டது. வீட்டு வேலை பார்க்கும் அவனது தாயாரின் சம்பளத்தில் அவன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான். வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ரிஷ்வான் சேக், அப்துல் கலாமைப்போல் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறான்.
0 comments
Write Down Your Responses