வடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வளிமண்டவியல் திணைக்களம் அறிவிப்பு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கரையேரங்களை புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு கிழக்கே 200 கிலோ மீற்றரில் ஏற்பட்டுள்ள தீடிர் தாழமுக்கம் புயலாக மாறி வருவதாக அறிவித்துள்ள வளிமண்டலவியல்
திணைக்களம் இன்னும் சில மணித்தியாலயங்களில் இது வேகமாக நகர்ந்து வடக்கு பகுதியை முற்றாக தாக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும் இப்புயல் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இப்புயலானது முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையான பகுதிகளையே அதிகளவில் தாக்கவுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை மற்றும் தாழமுக்கமான கால நிலை தற்போது நிலவி வருவதோடு அமைதியான சூழ்நிலையே தற்போது நிலவி வருகின்றது.
இதேவேளை வடக்கின் கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் கரையோரங்களை விட்டு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses