சிரியா: 3 நாள் இடைவெளிக்கு பிறகு கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் மீண்டும் குண்டு வீச்சு

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. பக்ரீத் பண்டிகையையட்டி வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பினரும் சம்மதன் தெரிவித்து இருந்தனர். அதன்படி கடந்த 3 நாட்களாக தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் போர்நிறுத்த இறுதி நாளான நேற்று சிரியா ராணுவம் திடீரென்று குண்டு வீச்சை மீண்டும் தொடங்கியதாக எதிர்தரப்பினர் கூறினர்.

தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஹராத் அல்-ஷ்வான் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானங்கள் நேற்று சரமாரியாக குண்டு வீசின.

இது கிளர்ச்சி படையினர் முகமிட்டுள்ள பகுதியாகும். இதேபோல கிழக்கே அமைந்துள்ள டெர் அல்-ஷோர் நகரிலும் குண்டு வீச்சு நடந்தது.

ஆனால் இந்த குண்டு வீச்சு சம்பவங்களில் ஏற்பட்ட சேதவிவரம் உடனடியாக தெரியவில்லை. எனவே ஆசாத் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளருக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கி விட்டது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News