பாணின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இன்று காலை கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது
இதன் படி, 58 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பாண் இறாத்தல் ஒன்றின் புதிய விலை 60 ரூபாவகும்.
கோதுமை மாவின் விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டது
இதன்படி பிரிமா மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 6 ரூபாவாலும், செரன்டிப் மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது
இந்த விலை அதிகரிப்பை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் இணை செயலாளர் நிமல் பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதனிடையே, வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses