யாழி நீராவியடியில் முதியவரின் சடலம் மீட்பு
யாழ்நீராவி டியைச் சேர்ந்த 54 வயது மூன்று பிள்ளைகளின் தந்தையான அபூர்வசிங்கம் சிறிகாந்தன் அவரது வீட்டுக்கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10 வருடங்களாக ஜேர்மனியில் வசிந்துவந்ததாகவும் அங்கிருந்து நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தநிலையிலேயே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளவருடைய மூன்று பிள்ளைகளும் ஜேர்மனியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அயல் வீட்டுத்தோட்டத்திலிருந்து ஒருவகையான துர்நாற்றம் வீசியது தொடர்பில் பொதுமக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே பொலிஸார் அவரது வீட்டுக்கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மீ்ட்கப்பட்ட சடலம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses