நாட்டைக் காக்க முடியாத கழுதைகள் அரசியலில் இருக்கிறார்கள்! புத்த சாசன அமைச்சுக்கு இடுப்பில் சீவன் உள்ளவர் தேவை!! - ஞானஸாரர்
இடுப்பில் சீவன் உள்ள ஒருவரை புத்த சாசன அமைச்சராக நியமிக்குமாறு பொதுபல சேனா அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
அவ்வியக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் எசல போயா தினத்திற்கு முன்னர் இந்நாட்டில் செயற்படுகின்ற பிறமத அடிப்டைவாதங்களை இல்லாதொழிப்பதற்கு அதிகாரம்மிக்கவர்கள் முன் வரவேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படாதவிடத்து, அதிகாரபூர்வமற்ற பொலிஸாராக தமது இயக்கம் மாறி கடின நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் தேர்ர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு உரையாற்றும்போது:
‘எங்கள் யாப்பில் பௌத்தர்களின் உரிமைகளை அழித்தொழிப்பதற்கே சட்டம் - சட்டதிட்டங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு இதில் நீந்த முடியும். இது சர்வதேச அரசியல் சூழ்ச்சியாகும். சர்வதேச ரீதியாக எங்கள் நாட்டை நொறுக்க, அபகீர்த்தி ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படைவாதிகளுக்கு நாங்கள் ஒன்று சொல்லவிரும்புகின்றோம். பௌத்தர்களின் பொறுமையைச் சோதிக்க முற்பட வேண்டாம். எங்கள் பொறுமை எல்லை மீறியுள்ளது.
கறுப்பு வெள்ளையர்களின் சட்டங்களில் மதக் குளறுபடி, நிச்சயம் எதிர்காலத்தில் ஏற்பட்டே ஆகும். அதற்காகத்தான் அந்த அடிப்படைவாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரத்தை அழித்தொழிக்கிறார்கள். கலாச்சாரத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியாத கழுதை அரசியலாளர்கள் கொஞ்சம் பேர் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள்.
.
மறுமைக்காக எதுவுமே செய்யாமல் இருக்கின்ற புத்த சாசன அமைச்சரினால் நாட்டுக்கு எவ்விதப் பயனும் இல்லை. பிற மதத்தவர்களின் விடயத்தில் நீங்கள் என்னதான் செய்தீர்கள் என நான் புத்த சாசன அமைச்சிடம் கேட்கிறேன். .
யாப்பு என்ற வலையில் பௌத்த மக்களை சிறைப்படுத்தாகிவிட்டது. இலங்கை என்பது வங்காள விரிகுடா அல்ல. உலகிலுள்ள எல்லாவிதமான அசுத்தங்களும் இலங்கைக்குத்தான் கொண்டுவரப்படுகின்றது. பைபிளில் குறிப்பிடப்படுகின்ற கடவுள், பணியாட்கள், பேய்பிசாசுகளின் தொகைக்கேற்ப இங்கு கிறிஸ்த ஆலயங்களை நிர்மாணித்தால் எங்களுக்கு என்னாகும்? குறைந்தளவு இடுப்பை நேராக நிமிர்த்திக் கொண்டு வேலை செய்யமுடியுமானா ஒரு மனிதனை புத்த சாசன அமைச்சுக்கு நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். காரணமில்லாமல் புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற ஒருவர் இல்லாதிருக்க வேண்டும்.
குணமும் இல்லை, குற்றமும் இல்லை போன்றவர்களை நியமித்து போதும் போதும் என்றாகியுள்ளது. அடுத்தது அமைச்சிலுள்ள பெரிய தலைகளுக்கு சரியாக ஒரு கணிப்பீடுகூட செய்யமுடியாது.
இன்று எங்கள் பெளத்தர்களுக்குப் பாரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அது பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தேவையில்லை. அரசியலாளர்கள் பொதுமக்களின் பலமான அதிகாரத்தை எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்குச் சென்றது வெறும் பலாக்காய் அவிப்பதற்காக அல்ல. ஏதேனும் ஒரு வேலை செய்வதற்கே! நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அமைச்சர்களுக்குக் கிடையாது.. நாங்கள் மதகுருமார்களாக இருந்து பொறுமை காத்த்து போதும்...போதும்... எங்களை அசைக்க யாராலும் முடியாது.
ஐயறிவுடையவர்களாக நின்று இதற்கு முடிவு காணவியலாது. இனமோ – மறுபிறப்போ இல்லாத மேற்கத்தேய செல்லங்களுக்கு இந்நாடு பற்றிய அக்கறை இல்லாமலிருக்கலாமி. ஆனால், எங்களுக்கு அக்றை இருக்கிறது. நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தே ஆவோம்.’ என்று குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses