வெள்ளை மாளிகையில் புகுந்த பெண் கைது தீவிரவாதியா?
அமெரிக்க வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பையும் மீறி புகுந்த பெண்ணை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவரா என்று தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதுடன் இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் அரசு பணிகளை கவனித்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளை மாளிகையின் சுவர் ஏறி குதித்து பெண் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கொலம்பியா போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெள்ளை மாளிகை அருகே பெண் உள்பட 17 பேர் நேற்று பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களில் டயானி வில்சன் என்ற பெண் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என்பதுடன் இவர் ஏற்கனவே சிறையில் இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. கைதான பெண் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடையவரா என்று விசாரணை நடக்கிறது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses