`கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' ஜூலை 07 இல்.....!
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர்முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் முஹம்மத் அக்ரம், கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல், உளவளவியலாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கொம்பனித் தெரு முஸ்லிம் நூலகத் தலைவரும், அக்ரம் பவுண்டேஷனின் தவிசாளருமான அல்ஹாஜ் முஹம்மத் அக்ரம் அவர்கள் முதற்பிரதியை பெற்றுக்கொள்வார். சிரேஷ்ட எழுத்தாளர் நயீமா சித்தீக் அவர்களும், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பி.இப்திகார் அவர்களும் இந்நிகழ்வில் கௌவிக்கப்படவுள்ளார்கள்.
வரவேற்புரையை கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் அவர்களும், ஆசியுரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களும், வாழ்த்துரையை கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் நிகழ்த்த, கவிமணி என். நஜ்முல் ஹூசைன் அவர்களால் கவி வாழ்த்தும் இடம் பெறவிருக்கிறது. கருத்துரையை எழுத்தாளர் திக்வல்லை கமால் அவர்களும், நூல் விமர்சனத்தை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களும் நிகழ்த்தவுள்ளதுடன் நாகபூஷணி கருப்பையா அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments
Write Down Your Responses