மொபைல் மூலம் உங்கள் கிரடிட் கார்ட் விபரங்கள் திருடப்படுகிறது கவனம்!
மொபைல் போன்களில் தரவேற்றப்பட்ட பிரத்தியேக மென் பொருள் மூலமாக திருடும் நூதன கும்பல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்தக்கும்பல் இதுவரை உலகெங்கும் உள்ள 30 மில்லியனுக்கும் மேலான கிரடிட் காட்டுக்களின் விபரங்களை திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த ஒரு மென்பொருளை மொபைலில் பதிவதன் மூலம் கிரடிட் கார்ட் வைத்திருப்பவரின் அருகில் சென்று அனைத்து விபரங்களையும் சில செக்கன்களில் எடுத்து விட முடியுமாம்.
பிரித்தானியாவில் மட்டும் 5.4 மில்லியன் பேர் மாதாந்தம் கிரடிட் காட்டை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இப்படியான திருடர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என வாசகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
0 comments
Write Down Your Responses