கண்ணால் கண்ட சாட்சிகள் எதுவுமில்லை. ஆசிரியை முழங்காலில் நின்ற செய்தி உருமாற்றப்படுகிறது!
தான் முழந்தாழிட்டு நின்ற சம்பம் தொடர்பில் ஜனாபதி தலையிட்டு நியாயமான முறையில் அலசி தீர்வினைப் பெற்றுத் தருவார் என்று நம்பியிருந்தாலும், அதுதொடர்பில் அச்சுறுத்தல்கள் வராதிருக்கும் என்று நம்பாமல் இருக்க முடியாது என்று வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழங்காலில் நிற்குமாறு ஏவப்பட்ட ஆசிரியை பிரியானி சுசீலா ஹேரத் குருணாகலையில்இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு குறிப்பிட்டார்.
குருணாகலை விக்கிரமசிங்க ரதகுரு கேட்போர் கூடத்திலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. சுசீலா ஹேரத் தான் முகங்கொடுத்த அந்த அசாதாரண நிகழ்வின் பின் முதன் முதலாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்துரைத்தார்.
கல்வி ஊழியர்கள் சங்கம் இந்த ஊடகவியாலர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிரியின் தலைமையின் கீழ் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தப்பட்டது.
தான் முகம் கொடுத்த நிகழ்ச்சி பற்றி தான் இன்னும் பெரும் கவலையில் இருப்பதாகவும் இந்தக் காரணத்திற்காக நவகத்தேகம பாடசாலைக்குப் பதிலாக தனது கணவன் சேவை புரியும் மஹஉஸ்ஸாவப் பாடசாலைக்கு இட மாற்றீடு எடுத்துள்ள போதும், ஒருநிலைப்படாத மனோநிலையில் இருப்பதால் புதிய பாடசாலைக்கு கரும மாற்றப் போகவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மஹஉஸ்ஸாகம பாடசாலைக்கு நவகத்தேகம பிரதேசத்தைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு தான் போகும்போது மேலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவருமோ என்ற பயம் தன்னை ஆட்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, தான் சிறந்ததொரு பரிகாரம் பெற்றுத் தருவதாகக் உறுதியளித்தார். அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையிலுள்ள முழு ஆசிரியர் குழு சார்பிலும் தனக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுத் தருமாறு மீண்டும் நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் ஹேரத் ஆசிரியை மேலும் குறிப்பிட்டார்.
கல்வி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிரி உரையாற்றும் போது,
‘சுசீலா ஹேரத் ஆசிரியை அரசியல் ரீதியில் முழந்தாழிடச் செய்த செய்த கருமத்திற்கும் அப்பாற் சென்ற விடயமொன்று தற்போது வடமேல் மாகாணத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியலுடன் தொடர்புடைய வலயக் கல்விப் பணிப்பாளர் இது தொடர்பில் நேரில் கண்டதாக குறிப்பிடக்கூடிய ஆறு ஆசிரியர்களும், பிரதி அதிபரும் ஆசிரியைக்குச் சார்பாக சாட்சியளிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதுவும் காணாதவர்கள் போல அவர்கள் தற்போது திசைமாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பில் சட்டம் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses