இணையவழி அடிப்படைவாதிகளுக்கு வலை வீசுகிறது குற்றப்புலனாய்வுப் பிரிவு
இனவாத. மதவாத கருத்துக்களைக் கக்கும் இணையத்தளங்களை நடாத்திச் செல்லக்கூடிய நபர்களை வலைவீசித் தேடும் பணியை குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க ஸ்ரீவர்த்தன குறிப்பிடுகிறார்.
முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களினூடாக இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என அவர் குறிப்பிடுகிறார். எதுஎவ்வாறாயினும், கையடக்கத் தொலைபேசியினூடாக குறுந்தகவல்கள் வழங்குவோரை கண்டுபிடிப்பதை விட, மிகக் கொடூர விடயங்களைப் பரப்பும் இவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடின காரியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses