அநாதைச் சிறுவர்களைக்கொண்டு பன்றிகளைக் கொன்ற மதகுரு கைது!
திஸ்ஸமகாராம, போககபெலஸ்ஸ சிறுவர் இல்லத்துச் சிறுவர்களை அனுப்பி பன்றிகளையும், கோழிகளையும் கொலை செய்துவருகின்ற மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான மதகுரு இன்று திஸ்ஸமகாராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மதகுருவினால் நீண்ட காலமாக இந்த சிறுவர் இல்லம் நடாத்தப்பட்டுவருவதாகவும், அங்கிருக்கின்ற சிறுவர்களை அனுப்பி இவ்வாறான உயிரினங்கள் கொலை செய்யப்படுவதை புகைப்பட ஊடகங்களின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இது பற்றி விசாரிப்பதற்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சிறுவர் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses