முஸ்லிங்களுக்காக அமைச்சரவையை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை!
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் ரிசாத் பதியூதின் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடாத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் உடனடியாக அமைச்சரவையை கூட்டி தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெப்பிலியான சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்திய ஹக்கீம் அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments
Write Down Your Responses