தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றன' என்றார்.
தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான எம்மிடையே இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர் உண்மையில்'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கழின் ஏக பிரதிநிதிகள் அல்ல ஏன் ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்போது இவர்கள் எப்படி ஏகபிரதிநிதிகள் ஆவார்கள்.ஆனால் சிலர் தேவையின் நிமித்தம் அந்த நிலைப்பாட்டை எடுத்தபோது நான் அதனை எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போது தமிழகத்தில் ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும்போது அதனை சீர்குலைக்கக் கூடாது என்பதனால் நான் எத்தனையோ அவமானங்களை தாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டுள்ளேன் அதற்கு நல்லெண்ணமேயாகும். ஆனால் இத்தகைய எண்ணத்துடன் தமிழரசுக் கட்சி செயற்படாது அவர்கள் அடுத்த வருட இருப்பை மையமாகவே செயற்படுகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
உண்மையை கூறப்போனால் கூட்டமைப்பு பொய்யிலேதான் ஓடுகின்றது அவர்களுக்கு நேர்மையே கிடையாது எனவே இவர்களுடன் வேலை செய்வது கடினமானது. எனினும் நான் குழப்பமாட்டேன்' என்று அவர் கூறினார். 'தமிழரசுக் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து பணம் சேர்த்தார்கள் ஆனால் அதில் என்ன செய்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது எனக்குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லவேயில்லை ஆதாரத்துடன் நிரூபிக்கிறார் ஆனந்த சங்கரி!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses