கல்லாறில் வேன் வெறியாட்டம் அப்பாவிகள் பலி!(படங்கள் இணைப்பு)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 07.30 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த நபரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது) ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
திருமலையில் இருந்து அம்பாறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக சென்று கொண்டிருந்த வான் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி பின் மின் கம்பம் ஒன்றில் மோதியதன் பின்னர் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses