சிங்களவர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் முஸ்லிம்களுக்கும் பாதுகாவலன் நானே! - ஜனாதிபதி மகிந்தர்
இந்நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்தர்களைப் போலவே, தமிழ் சிங்களவர்களதும் பாதுகாவலன் தான் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தனது கட்டாயக் கடமை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேருவளையில் குறிப்பிட்டார்.
ஏதேனும் ஒரு இனத்திற்கு பிரச்சினைகள்ஏற்படுவதாயின், அதனை இல்லாமற் செய்வதற்கு சட்டத்தைக் பயன்படுத்துவதற்குத் தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேருவளை ஹபுகொட ஸ்ரீ மகா விகாரையில் புதுக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக துன்பம் அனுபவித்த நாடு. அவ்வாறான துன்பத்தை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்க வேண்டியதில்லை எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses