முஸ்லிம்களே பெளத்தர்கள் செய்த செய்ந்நன்றியை மறவாதீர்கள்! - ஜாதிக்க ஹெல உறுமய

சிங்கள பௌத்தர்கள் செய்த செய்ந்நன்றியை மறவாதீர்கள் என முஸ்லிம் சமுதாயத்திடம் ஜாதிக்க ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகக்கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற ஹர்த்தாலில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பங்களிப்பு நல்கவில்லை என்பது புலனாகியுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதியும், இனவாதியுமான முஜீபுர் ரஹ்மானின் அழைப்புக்காக அவருடன் கைகோர்த்த கிழக்கு மாகாண முஸ்லிம் அடிப்படைவாதிகளைத் தாங்கிய நகரங்களும் உள்ளன.

காந்தக்குடா, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் கடைகளை அடைத்து முஸ்லிம்கள் ஹர்த்தாலில் ஈடுபட்டதை அறிந்துகொள்ள முடிந்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தையிலிருந்து சிங்கள விரோத, பெளத்த விரோத ஹர்த்தால்களில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவொன்றும் அவர்களுக்கு உடந்தையாக அரசியலில் கையாளாகாதவர்களும் என்பதும் தெரியவந்துள்ளது.

எந்தவொரு குறிக்கோளுமின்றி, குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு வழிநடாத்தப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய அன்பர்கள் நாங்கள், வீரர்கள் நாங்கள் என்று கோசமிட்டுக்கொண்டு பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடபட முனைந்துள்ளது. தமது கீழ்த்தரமான அரசியல் சுயலாபத்துக்காக, தனது பங்கைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியதாக அது இருக்கலாம்.

நாங்கள் அடிக்கடி சொன்னவை என்ன? கிழக்கு மற்றும் தென் கிழக்கு வலயங்கள் அடிப்படைவாதத்திற்கும் கண்மூடித்தனத்திற்கும் பலிபோயுள்ளது என்பது. இந்தப் பிரதேசங்களை நோக்காகக் கொண்டு, ‘முஸ்லிம்களின் தாயகம்’ என்ற எண்ணக்கருவும் மேலெழுந்து வந்துள்ளது. ஹர்த்தால் வெற்றிபெற்றதாகக் கருதும் பிரதேசங்கள் இதனைத் தான் தாரக மந்திரமாக ஓதுகின்றன. அன்று விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைத் தாக்கி, முஸ்லிம்களை விரட்டியடித்தபோது, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, வடக்கிலிருந்து தொன்னூராயிரம் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது, ஹர்த்தால் நடத்தாத அஸாத் ஸாலி, முஜீபுர் ரஹ்மான் போன்ற தடித்த காகித வீரர்கள் சிங்களவர்கள் அன்றி முஸ்லிம்களே அவர்களிடம் கேள்வி கேட்கக் கடப்பாடுடையவர்கள்.

ரவூப் ஹக்கீம் பிரபாகரனுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்தவேளை, அன்று அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாதவர்கள், பேசாமடந்தைகளாக இருந்தவர்கள் அந்த தடித்த காகித (கார்ட்போட்) வீரர்கள் அல்லவா? அவர்கள் முன்னணியில் வந்தார்களா? மணிராசகுளத்தை எல்ரீரீயினர் பிடித்தபோது, ஹக்கீமும், அஸாத் ஸாலியும், முஜீபுர் ரஹ்மானும் எங்கே இருந்தார்கள்?

அவ்வாறே, கிழக்கு விடுதலையான 2008 ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் எடுத்த முயற்சிகள் பற்றி ஒருபோதும் மறக்கவியலாது என்பதையும் இந்த அடிப்படைவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ, அதனை தோல்வியுறச் செய்வதற்கோ ஒரு கடுகளவேனும் உதவி வழங்காத இந்த தடித்த காகித அட்டை வீரர்களுக்கும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சொல்ல வேண்டியது என்னவென்றால், 26,000 சிங்கள இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பயங்கரவாதத்தை முறியடித்துப் பெற்றெடுத்த சுதந்திரத்தை, சமாதானத்தை நுகர்ந்துகொண்டு, அந்த சுதந்திரத்தினூடாகவே ஹர்த்தால் செய்துகொண்டிருக்கின்ற அடிப்படைவாதிகளுக்கு என்றும் நினைவினின்றும் நீங்காத பாடம் புகட்டுவதற்கு சிங்கள பௌத்தர்கள் திடசங்கற்பம் பூண வேண்டும். இந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பூதகரமான பொய்களுடன் கூடிய பிரச்சாரங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் எதிராக ஒன்றுபடுமாறு ஏனைய முஸ்லிம் சகோதர்களிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், சிங்கள பௌத்தர்களுக்கு ஒருபோதும் செய்ந்நன்றி மறக்க வேண்டாம் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

(தமிழில்: கலைமகன் பைரூஸ்)

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News