இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றதாம் கனடா!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு கனடாவும் பங்குபற்ற தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பொதுநலாவாய மாநாட்டிற்கான பிரதிநிதியும் செனட் சபை உறுப்பினருமான ஹியூ சீகல் தெரிவித்துள்ளார். தாம் திறந்த மனதுடன் இலங்கையின் நண்பராகவும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை காண்பதற்காகவுமே இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஹியூ சீகல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பாக கனடா அரசாங்கத்திற்கு அறிவிப்பதும் தமது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம்மாநாடு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அவர் இன்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses